தினமலர்

Advertisement

Dinamalar Logo
Districts

வெள்ளி, ஏப்ரல் 19, 2024 ,சித்திரை 6, குரோதி வருடம்

Advertisement

12

கோவில் நிலத்தில் சர்ச் அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

கோவில் நிலத்தில் சர்ச் அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

UPDATED : செப் 18, 2022 06:21 AM

ADDED : செப் 18, 2022 06:21 AM

Google News
ShareTweetShareShare

UPDATED : செப் 18, 2022 06:21 AM ADDED : செப் 18, 2022 06:21 AM

12

Google News
Latest Tamil News
Colors

சென்னை : அரியலுார் மாவட்டத்தில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், அறநிலையத் துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிமடம் தாலுகாவில் உள்ள சாலைக்கரையைச் சேர்ந்த, சுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் உள்ள ரெட்டை பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா ஆக உள்ளேன். இங்கு, 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அனைவரும் ஹிந்துக்கள்.சமீபத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் குடியேறினர். கோவில் நிலங்களை ஆக்கிரமிக்க துவங்கினர். எங்கள் வழிபாடுகளில் குறுக்கிட்டனர்.கிராமத்தில், சர்வேஸ்வரன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. ரெட்டை பிள்ளையார் கோவிலும் உள்ளது.

இந்த கோவில்கள் அமைந்துள்ள நிலங்களை, வருவாய் ஆவணங்களில் தோப்பு மற்றும் புறம்போக்கு என, மாற்றி உள்ளனர்.கிராமத்தைச் சேர்ந்த சிலர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, சின்னப்பர் தேவாலயம் என்ற பெயரில் சர்ச் கட்டினர். இந்த தேவாலயம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்படவில்லை.ரெட்டை பிள்ளையார் கோவில் குளம், சர்வேஸ்வரன் கோவில் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அதை அகற்றக் கோரி, மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கவும், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு பதில் அளிக்க, அறநிலையத் துறை கமிஷனர், அரியலுார் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை SUBSCRIBE செய்யுங்கள்

ThreadsYouTube Telegram
imgpaper

Advertisement

Topics :
பொது

Advertisement

Advertisement

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

P.Sekaranசெப் 18, 2022 11:59

திமுக அரசு இதெல்லாம் கண்டுக்காது. இந்து கடவுள் அக்கரை இல்லாத அரசு சர்ச்சுக்கும் மசூதிக்கும் ஆதரவு கொடுக்கும் ஆனால் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்றும் வாய் திறக்க மாட்டார்கள். கேரளா ஓனம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் இதெல்லாம் சேர்த்து மக்கள் எலெக்ஷனில் ஓட்டளிப்பர்

Nellai tamilanசெப் 18, 2022 10:41

விடியல் அரசு இப்படி தான் இருக்கும்

இவனுங்க வேலை என்ன தெரியுமா, குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் என்று இருப்பதாக, மாற்றி குமரியில் குன்று இருக்கும் இடத்தில எல்லாம் குமரன் கூட இப்ப ஏசப்பனும் இருக்கிறார், திருப்பரங்குன்றம் பலகாலம் மலை மேல மத மாற்றி கூட்டத்தின் அடையாளங்கள் உள்ளது

Anantharaman Srinivasanசெப் 18, 2022 09:58

கிறிஸ்துவர்களின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்து கொடுக்கும். அதுதான் திராவிடம்..

Vijayசெப் 18, 2022 09:54

என்ன செய்வது எவ்வளவு பட்டாலும் ஹிந்துக்களுக்கு சூடு சுரனை வருவதில்லையே

GANESUNசெப் 18, 2022 09:29

அவங்கதான் பல இடத்தில் மனு குடுத்து அப்புறம்தான் கோர்ட்டுக்கு போயிருக்காங்க. நேர கோர்ட்டுக்கு போனா முதல்ல லோக்கல்ல மனு குடுங்கன்னு திருப்பி உடுவாக்க..நம்ப லீகல் வழிமுறைகள் இப்படித்தான் சுற்றி விடப்பட்டிருக்கு..இந்தியாவில் இந்துக்கள் நிலை இதுதான்.

Kasimani Baskaran
Kasimani Baskaranசெப் 18, 2022 09:21

வெளியேற்றினால் மற்றவை தானே அடங்கும்.

Palanisamy Tசெப் 18, 2022 09:20

சபாஷ் தர்மகாத்தா சுப்ரமணியன் அவர்களே. உங்களை போன்று இன்னும் ஆயிரமாயிரம் தர்மகர்த்தாக்கள் தமிழகத்தில் மலர வேண்டும். வளரவும் வேண்டும். மோசமான மதப் போதகர்களை தோலுரித்து நடந்த உண்மைகளை மக்களிடம் சொல்லியுள்ளீர்கள். எங்கேயோ தப்புகள் நடந்துள்ளது. பண பலம் படைத்தவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்குவார்கள் செய்வார்கள். நம் சைவ சமயம் உயர்ந்த வழிப்பாடு உண்மையான வழிப்பாடு. சைவநெறி சமயத்தை உதறிவிட்டு மாற்று மதத்தை நாடியுள்ளவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் மேலும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பூமியில் இன்று நேற்றல்ல, பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை மாந்தர்கள் வாழ்ந்துக் கொண்டு வருகின்றார்கள். அப்போதெல்லாம் இந்த மண்ணில் நாம் இப்போது காணும் எந்த மதங்களுமில்லை அப்படியென்றால் அக் காலத்து மக்கள் மலையிலும் குகையிலும் வாழ்ந்தார்கள். ஏன் இந்த மதப் போதகர்கள் இந்த குகை வாசிகளுக்கு வழிக் காட்ட வர வில்லை, அல்லது வரமுடியவில்லையா? இது அவர்களின் தலையெழுத்தா?

GMMசெப் 18, 2022 08:59

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு. வழக்கு பதிவு முதல் தீரும் வரை ஆக்கிரமிப்பு பகுதிகள் கோவில் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியர் பொறுப்பில் இருக்க வேண்டும்.

VENKATASUBRAMANIANசெப் 18, 2022 07:55

எல்லா தில்லுமுல்லுகளும் ஒன்றன் பின் ஒன்றாக இப்போதுதான் வெளியே வருகிறது. திராவிட பாடலே தில்லுமுல்லு செய்வதுதான்.

RaajaRaja Cholan
RaajaRaja Cholanசெப் 18, 2022 10:26

Follow us

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us