தினமலர்
Sign Up

Advertisement

Dinamalar Logo
Districts

மாவட்ட செய்திகள்

வியாழன், மார்ச் 28, 2024,பங்குனி 15, சோபகிருது வருடம்

Advertisement

கோயில்களை இடித்து கடை கட்டி வாடகைக்கு விட முயற்சி

கோயில்களை இடித்து கடை கட்டி வாடகைக்கு விட முயற்சி

UPDATED : செப் 20, 2022 03:05 AM

ADDED : செப் 20, 2022 03:02 AM

Google News
ShareTweetShareShare
22

UPDATED : செப் 20, 2022 03:05 AM ADDED : செப் 20, 2022 03:02 AM

22
Google News
Latest Tamil News
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சந்தை திடலுக்குள் விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 கடைகள் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளனர்.
இங்கு நபார்டு நிதியுதவியுடன் 240 கடைகளும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான கடைகளையும் தரை வாடகைக்கு விட்டுள்ளனர். தரைவாடகைக்கு பெற்றுள்ளவர்கள் கடைகள் கட்டி தனிநபர்களுக்கு கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளனர்.

Image 999150

இந்த கடைகளுக்கான வாடகையை சீரமைக்க நீதிமன்ற உத்தரவுபடி முதற்கட்டமாக நபார்டு நிதியுதவியுடன் கட்டப்பட்ட கடைகளுக்கு மட்டும் ஏலம் விட்டனர். ஏலம் எடுத்தவர்களுக்கு கடைகளை ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், சந்தையில் உள்ள நுாலகத்தின் பின்புறம் இருந்த விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 புதிய கடைகள் அமைக்கும் பணியில் தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சனியின் கணவர் சுதந்திரம், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் கணவர் உக்கிரபாண்டியன் மற்றும் இரு கட்சிகளின் கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய கமிஷனர் பாண்டியிடம் கேட்டபோது, 'புதிதாக கடைகள் கட்ட எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. கட்டியுள்ள கடைகளை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசில் புகார் தெரிவித்துள்ளேன்' என்றார். ஆனாலும் கடைகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., வினர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ., சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை SUBSCRIBE செய்யுங்கள்

ThreadsYouTube Telegram
imgpaper

Advertisement

Tags :
Topics :
அரசியல்

Advertisement

Advertisement

Advertisement

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Lion Drsekar
Lion Drsekarசெப் 20, 2022 13:13

ஒன்றை உலகம் புரிந்து கொள்ளவேண்டும் காட்சி ஒன்றுதான் ஆனால் ஆட்சிகள் மட்டுமே மாறும், அவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள் ஆனால் மக்கள் ஒற்றுமையாக வாழ வழி விடமாட்டார்கள், மக்கள் ஒன்று சேர்ந்தால் உண்டுவாழ்வு, இதற்க்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதுதான் இன்றைய ஜனநாயகத்தின் கொள்கையாகிப்போனது வருத்தம் அளிக்கிறது . வந்தே மாதரம்

Ramesh Sargam
Ramesh Sargamசெப் 20, 2022 12:05

திமுக இந்த உலகில் இருக்கும்வரை ஹிந்துக்களுக்கு, ஹிந்து வழிபடும் ஸ்தலங்களுக்கு பாதுகாப்பே இல்லை. திமுக ஒழியவேண்டும்.

நாகரீகமாக சொல்லவேண்டுமென்றால் இதனை கையாடல் திராவிட மாடல் என குறிப்பிடலாம். ஒழுக்க சீலர்கள் எந்த வகையான உருட்டை வைக்கப்போகிறார்கள் என பார்க்கவேண்டும்.

duruvasarசெப் 20, 2022 11:44

இனிமேல் திராவிட மாடல் என மொட்டையாக கூறாமல் திருட்டு திராவிட மாடல் என்ற அடைமொழியுடன் குறிப்பிடலாம். வெண்தாடி குங்கும பொட்டுகாரர் என்ன உருட்டபோராருன்னு பார்கலாம்.

Raaசெப் 20, 2022 11:39

க(ழிச)டைகள்

ரவீந்திரன்செப் 20, 2022 11:28

சம்பந்தப்பட்டவர்கள்மீதும் அரசு மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளவேண்டும். திராவிட விஷமகளே, கோவில் நிலம் என்றால் கிள்ளுக்கீரையா, அது நாங்கள் வழிபடும் தெய்வங்களின் நிலம். தீண்டிப்பார்க்காதீர்கள், சாம்பலாவீர்கள்.

சபாபதிசெப் 20, 2022 11:24

2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக இந்துக்கள் செய்த மாபெரும் முட்டாள்தனம் பாஜக வுக்கு கணிசமான வாக்குகளை வழங்காததே. இந்துக்களைக் கொட்டும் விஷத் தேள்களான திராவிட கட்சிகளுக்கே இலவசங்களுக்கும் பிரியாணிக்கும் திரும்பத்திரும்ப வாக்களித்து தங்கள் சோப்ளாங்கித்தனத்தை உலகறிய உணர்த்திவரும் தமிழக இந்துக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து தங்கள் உலையில் போட்டுக்கொள்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Nellai tamilanசெப் 20, 2022 10:38

இரண்டும் அழிய வேண்டிய தீய சக்திகள்

abibabegum
abibabegumசெப் 20, 2022 10:18

இவர்களை தண்டிக்க இந்து கடவுள்கள் வருகிறார்களோ இல்லையோ நிச்சயம் அல்லாஹ் இவர்களை தண்டிப்பார்

ஸாயிப்பிரியாசெப் 20, 2022 09:28

இந்த திக கும்பல் மாடல் அரசு இருக்கும் வரை கோயில் இடிப்பும் கடைகள் (டாஸ்மாக்) அதிகரிக்கும் அத்தனையும் ஈ வே ரா விற்கு சமர்ப்பணம் நம் ஓட்டு நம் கோயிலுக்கு பாதுகாப்பு

duruvasarசெப் 20, 2022 11:49

Follow us

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us